
காலி, மாத்தறை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.
மேலும் நில்வல, மற்றும் களு ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்ளம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை, நுவரெலியா, பதுளை, மாத்தறை, ஹம்பாந்தொட்டை, காலி ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





