சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி இன்று (30.09.2015) காலை பிரதேச செயலகத்திலிருந்து ஆம்பமாகி வவுனியா நகர்ப்புற வீதியூடாக சென்று வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது.
சிறுவர்ளுக்கு எதிரான வன்முறையை தடுப்பது சம்பந்தமான நிகழ்வுகளும் வாகனகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றது.
இப் பேரணியினை வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராஜா ஆரம்பித்து வைத்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வவுனியா பிரதேச செயலகம் என்பன ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







