பாகிஸ்தான் சுப்பர்  லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ்!!

445

chaminda vaasபாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்­ளிட்ட பலர் பயிற்­சி­யா­ளர்களாக இணைய உள்­ளனர்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டி­களை அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது.இதில் இலங்­கையின் முன் னாள் வேகப்­பந்து வீச்­சாளர் சமிந்த வாஸ், மேற்­கிந்­திய தீவு­களின் ஜோர்டன் கிரினிஜ், இந்­தி­யாவின் முன்னாள் சக­ல­துறை வீரர் ரொபின் சிங் உட்­பட 15 பயிற்­சி­யா­ளர்கள் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இது பற்றி பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியின் தலைவர் நஜம் சேத்தி கூறு­கையில்,15 பயிற்­சி­யா­ளர்கள் இது­வரை ஒப்­பந்தம் செய்­யப்பட்­டுள்­ளனர். இன்னும் சில பயிற்­சி­யா­ளர்­களை ஒப்பந்தம் செய்யும் பணி நடந்து வரு­கி­றது. மேலும், வெளி­நாட்டு வீரர்கள் மற் றும் பயிற்­சி­யா­ளர்­க­ளுடன் இணையும் போது உள் ளூர் வீரர்­களின் விளை­யாட்டுத் திறனும் அதி­க­ரிக்கும்” என்று தெரி­வித்­துள்ளார்.