ஒலிம்பிக்கில் கராத்தே, உட்பட 5 வகையான விளையாட்டுக்களை இணைக்க சிபாரிசு!!

483

olympic-2020எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே உட்பட 5 புதிய விளையாட்டுகளை இணைக்க போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்துள்ளது.

2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோவில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டடு ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெவுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை பொறுத்துத் தான் புதிய போட்டிகள் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்போல், கராத்தே, போர்ட் ஸ்கேட்டிங், மலையேற்றம் மற்றும் அலைச்சறுக்கு ஆகிய 5 விளையாட்டுகளை புதிதாக சேர்க்கும் படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழு சிபாரிசு செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் தான் புதிய போட்டிகளாக எவை இணைத்துக்கொள்ளப்படும் என வாக்களிப்பு நடத்தி முடிவெடுக்கப்படும்.