பார்வையின் தீவிரத்திற்கு ஏற்ப உருமாறும் விநோத மேலாடை!!

311

dreasபார்ப்­ப­வர்­களின் கவ­னத்தை ஈர்க்­கவோ அல்­லது அவ­ரது பார்­வையை திசை திரும்ப வைக்­கவோ கூடிய வகையில் தனது தோற்­றத்தை தன்­னிச்­சை­யாக மாற்றிக் கொள்ளும் மேலா­டை­யொன்றை வடி­வ­மைப்­பாளர் ஒருவர் உரு­வாக்கி சாதனை படைத்­துள்ளார்.

தென் கலி­போர்­ணிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதிப் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு வரும் பெஹனாஸ் பராஹி என்ற மேற்­படி வடி­வ­மைப்­பா­ளரால் முப்­ப­ரி­மாண அச்­சிடும் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி வடி­வ­மைக்­கப்­பட்ட இந்த ஆடை­யி­லுள்ள நுண் புகைப்­ப­டக்­க­ரு­விகள் மற்றும் உணர்­க­ரு­விகள், அந்த ஆடையை அணி­ப­வர்­களை பார்ப்­பவர் ஆணா அல்­லது பெண்ணா என்­பதை இனங்­கண்­ட­றிந்து அவரது பார்­வையின் தீவிரத்திற்கு ஏற்ப தனது தோற்றப்பாட்டை சுயமாக மாற்றிக் கொள்கிறது.