நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள் என 25 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாராவின் கொச்சி வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இயக்குனர் சிம்புதேவன் வீடு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மதுரை அன்பு, செல்வகுமார் ஆகியோரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.திடீரென சினிமா பிரபலங்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் இருப்பது பல்வேறு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
புலி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





