உண­வ­கத்தில் வாங்­கிய உணவில் போலி பல் தொகுதி!!

702

toothஉண­வ­க­மொன்றில் வாங்­கிய உணவில் போலி பல் தொகு­தி­யொன்றைக் கண்டு பெண்­ணொ­ருவர் அதிச்­சி­ய­டைந்த சம்­பவம் ஹொங்­கொங்கில் இடம்­பெற்­றுள்­ளது.

தென் ஹொங்­கொங்­கி­ல் தஸ் வான் சான் பிர­தே­சத்­தி­லுள்ள பிர­ப­ல­மான சுஷி எக்ஸ்­பிரஸ் என அழைக்­கப்­படும் உண­வக வலைப் பின்­னலில் குறிப்­பிட்ட பெண்ணின் மகள் அந்த உணவுப் பொதியை வாங்­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் உணவுப் பொதியில் போலி பற்­களின் தொகு­தியைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த அந்தப் பெண், உண­வக நிர்­வா­கத்­திடம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இது தொடர்பில் தாய்­வானை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் அந்த உண­வ­கத்தின் முகா­மை­யாளர் தெரி­விக்­கையில், தமது உண­வ­கத்தில் பணி­யாற்றும் எவ­ருமே போலிப் பல் தொகு­தியை அணி­ப­வர்கள் அல்லர் எனவும் எவ்­வாறு அந்தப் பல் தொகுதி உணவுப் பொதிக்குள் வந்­தது என்­பது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இந்த விவகாரம் குறித்து தாம் விசாரணைகளை மேற்கொண் டுள்ளதாக அவர் கூறினார்.