
கொடதெனியா பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவரையே இவ்வாறு விடுவிக்க மினுவான்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று சமர்ப்பிக்கப்பட்ட குறித்த இருவரின் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கை குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் அவர்களை விடுவிக்குமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




