
இவ் வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் 25 தொடக்கம் 45 வயது வரையானவர்கள் என பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2014ம் ஆண்டு எச்.ஐ.வி பதிக்கப்பட்ட 228 பேர் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 20 – 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு எயிட்ஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





