வவுனியாவின் பலபகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்கள் வெப்பத்தின் பிடியிலிருந்து ஓரளவு நிம்மதியடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மேலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினை தொடர்ந்து விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக நிலத்தினை உழுது வருகின்றமையோடு காய்கறி பயிர்களை செய்யும் பொதுமக்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கபடுவதாகவும் கவலையடைந்துள்ளனர்.







