தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன் அவர்கள் பதவியேற்று நேற்று (01.10.2015)முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு.விஜயம் செய்ததுடன் மாலை நயினாதீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் .
அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈ . சரவணபவான் அவர்களும் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் வருகைதந்தனர் .நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் ஆலய அறங்காவலர் சபையினர் மலர்மாலை அணிவித்து வரவேற்ப்பதையும் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார் .
நயினாதீவின் அபிவிருத்திப் பணிகள் பற்றி பொது மக்களுடன் ஆராய்ந்த பின்னர் நயினாதீவு நாகவிகாரைக்கும் விஜயம் மேற்கொண்டு விகாராதிபதிகளுடன் கலந்துரையாடுவதையும் பதிவேட்டில் ஒப்பமிடுவதையும் .இங்கு காணலாம் .