சேயா கொலை வழக்கில் விடுதலையான மாணவனும் குடும்பஸ்தரும் வைத்தியசாலையில்!!

855

kotadeniyawa-girl_4கொட்டதெனியாவ – சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவன் மற்றும் குடும்பஸ்தர் ஆகியோர் சுகயீனமுற்ற நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது இரத்தமாதிரி பரிசோதனை நேற்றுமுந்தினம் நீதிமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டதன் பின்னர் இவர்களது இரத்தமாதிரியும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரத்தமாதிரியும் பொருந்தாமையினால் இவர்கள் இருவரையும் நேற்று மினுவங்கொடை நீதிமன்றம் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.