பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை ஜப்பானுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அழைப்பை ஏற்ற பிரதமர் நாளை ஜப்பானுக்கு செல்கிறார்.
நாளை ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானின் “கியோதோ” நகரில் நடைபெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதோடு, அங்கு விசேட சொற்பொழிவொன்றை நடத்துகின்றார்.
இச் சங்கத்தின் கௌரவ தலைமைப்பதவியை ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.





