இலங்கையின் ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பிரித்தானியா!!

470

1487759910Jmes0122

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அததெரணவிற்கு வழங்கிய விஷேட செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியன் மூலம் செழிப்பான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதை இலங்கை சர்வதேசத்திற்கு வௌிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதனால் எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுவதாக இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.