நயன்தாராவைப் பயமுறுத்தும் நஸ்ரியா!

634

nayantharaதன்னைத் தேடி வரும் எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்வதில்லை நயன்தாரா. கதை நன்றாக இருக்க வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும், ஹீரோ பெரிய ஆளாக இருக்க வேண்டும் – இந்த மூன்று கொள்கைகளையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார்.

இருந்தாலும் நயனின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தபடி தான் இருக்கிறது. ஹீரோ சரியில்லை, கதை சரியில்லை என பல படங்களைத் தவிர்த்து விடுகிறார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நயன்தாரா போலவே இருக்கும் நஸ்ரியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

போதாக்குறைக்கு அடுத்த நயன்தாரா நஸ்ரியா தான் எனவும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக வெளியில் சொல்லி வருகின்றனர். ஏற்கெனவே நயன்தாரா போலவே இருக்கிறார் என நஸ்ரியா அறிமுகமானபோது வந்த விமர்சனங்களைப் பார்த்து கடுப்பானார் நயன்.

இப்போது ஆர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளதால், எங்கே தனக்கு வரும் வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக பறித்து விடுவாரோ என பயத்தில் இருக்கிறாராம் நயன்.