ஆளில்லா விமானம் மூலம் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி விநியோகம்: பில்கேட்ஸ் திட்டம்!!

451

60c7f1eb-2b0e-4ed1-9e44-dea516976bb4_S_secvpf (1)அமெரிக்க தொழிலதிபரும், உலகின் முதல்தர பணக்காரருமான பில்கேட்ஸ் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை வினியோகம் செய்து வருகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் முன்னேறாமல் உள்ளன. சரியான சாலை வசதியோ, பிற அடிப்படை வசதிகளோ கிடையாது. பஸ்களையே பார்க்காத பல கிராமங்கள் உள்ளன.

எனவே, இது போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க பில்கேட்ஸ் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

அதற்கான சாத்திய கூறு ஆய்வை அமெரிக்க டிரோன் நிறுவனம் ஒன்றின் துணையுடன் நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் தொலைதூர ஆப்பிரிக்க கிராமங்களுக்கு டிரோன் மூலம் தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.