
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.இதில் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14–ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை தொடருக்கான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலகக் கிண்ணத்தில் விளையாடிய அணியில் இருந்து எட்டு வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை. வெய்ன்சுமித், டாரன்சேமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான்பென், கோட்ரெல், நிகிடா மில்லர், கேமர் ரோச் ஆகியோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சு சர்ச்சையால் உலகக் கிண்ணத்தில் இடம் பெறாத சுனில்நரீன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இதேபோல காயத்தால் விலகி இருந்த டாரன் பிராவோவும் அணிக்கு திரும்பி உள்ளார்.தேவேந்திர பிஷூ, பிளக்வுட், பிராத்வெயித், பிளட்சர், ஜேசன் முகமது, ராம்பால் ஆகியோரும் அணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.
இதேவேளை ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாத டாரன்சேமி தான் 20 ஓவர் போட்டிகளில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் அணியில் வெய்ன் பிராவோ, போல்லார்ட் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்துக்கது.





