ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை டைரக்டர் கணேசன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.




