விண்­கல்லின் பயண பாதையை மாற்றும் முயற்­சியில் விஞ்­ஞா­னிகள்!!

400

Vinkal

எதிர்­கா­லத்தில் விண்­கல்­லொன்று மோது­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தி­லி­ருந்து பூமியைப் பாது­காக்கும் முக­மாக அந்த விண்­கல்லின் பய­ணப்­பா­தையை மாற்­று­வ­தற்­கான முயற்­சியை விஞ்ஞானிகள் முன்­னெ­டுத்துள்ளனர்.

இதன் ஆரம்ப கட்­ட­மாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்­கற்கள் மீது விண்­க­ல­மொன்றை மோத­விட்டு அவற்றின் பயணப் பாதையை மாற்ற முடி­யுமா என அமெரிக்க மற்றும் ஐரோப்­பிய அயிடா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் ஆய்வை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

இதன் பிர­காரம் 160 மீற்றர் மட்­டுமே அக­ல­மு­டைய டிடிமூன் என்றழைக்­கப்­படும் முட்டை வடி­வான விண்­கல்லின் பய­ணப்­பா­தையை மாற்­று­வது தொடர்பில் ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இந்தப் பரி­சோ­தனை முயற்­சிக்­காக எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இரு விண்­க­லங்கள் ஏவப்­ப­ட­வுள்­ளன. அவற்றில் ஒரு விண்­கலம் குறிப்­பிட்ட விண்­கல்­லுடன் மோது­கையில் மற்­றைய விண்­கலம் அந்த நிகழ்வின் விளைவைப் படம் பிடிக்­க­வுள்­ளது.

இது தொடர்பில் பிரான்ஸின் நன்டெஸ் நகரில் இடம்­பெற்ற ஐரோப்­பிய கோள்­மண்­டல விஞ்­ஞான கூட்­டத்தில் விஞ்­ஞா­னி­களால் விப­ரிக்­கப்­பட்­டது.

அதே­ச­மயம் எதிர்­வரும் 2022 ஆம் ஆண்டில் டிடிமூன் விண்கல்லையும் மற்றைய 750 மீற்றர் அகலமான டிடிமொஸ் விண்கல்லையும் திசைதிருப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.