வவுனியாவில் சிறுவர் தினத்தை முன்னிட்டு அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!!(படங்கள்)

1049

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா கல்மடு மகா வித்தியாலயம் மற்றும் பூம்புகார் கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை (01.10.2015) அன்று வழங்கி வைக்கப்படன.

இந் நிகழ்வு பாடசாலை வளாகங்களில் அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்மடு பாடசாலை அதிபர் செல்வி அமராவதி சபாரத்தினம் அவர்களும் பூம்புகார் கண்ணகி வித்தியாலய அதிபர் திரு.குகதாசன் அவர்களும் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அமைப்பை சேர்ந்த லக்ஸ்மிகாந்த், பிரியங்கன், ரினோத், நித்திலன் யதார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

2015 Oct 1 (2) 2015 Oct 1 (3) (1) 2015 Oct 1 (5) 2015 Oct 1 (6) 2015 Oct 1 (8)