மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது ஜெயந்தி தினத்தை அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டது.
நேற்று (02.010.2015) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியிலுள்ள அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் .இராசநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலி நினைவுரையும் இடம்பெற்றது.