வவுனியாவில் நேற்று ( 02.10.2015) காலை 10.00 மணிக்கு வவுனியா பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட இணைப்பாளர் நா.பாஸ்கரன் தலைமையில் பனை நடுகையை ஊக்குவிக்கும் முகமாக 70,000பனை விதைகளை நாட்டும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக வவுனியா பேராறு பிரதேசத்தில் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.சாரதா கர்ணன் பனை விதையினை நாட்டி இவ் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் பேராறு நீர்த்தேக்க திட்ட உத்தியோகத்தர் மற்றும் வவுனியா மாவட்ட பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.