சிறுமி படுகொலை சம்பவம்; மடிக்கணினியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவு

589

892490348Courtsகொட்டதெனியாவ – சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் மடிக்கணினியை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி சோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு மினுவாங்கொடை நீதவான் டீ.ஏ. ருவன் பதிரன பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது சிறுமியின் தாய் வாக்குமூலம் வழங்கியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். குறித்த வழக்கு மீண்டும் 05ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.