இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அடைக்கலநாதன் வரவேற்பு!!

833

Selvam

இலங்கை போர்க் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் வைத்து இந்திய ஊடகமான தந்தி டீவிக்கு அளித்த விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை குறித்த விவாதத்தில் இந்தியா கலந்து கொள்ளாமை கவலையளிக்கிறது. எனினும் இந்தியா தற்போது தன் கருத்தை சொல்லியுள்ளது.

தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுக்கான ஒரு விடயத்தை கவனத்தில் கொள்கிறோம். 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று, 13 பிளஸ் போன்ற கருத்துக்களை சொல்லியுள்ளது.

இந்தியா எமது பக்கம் தனது கரிசனையைக் கொண்டுள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.