ஈராக்கில் மே மாதத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

561

ஈராக்கில் மே மாதத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 2400 பேர்வரை காயமடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

2006 மற்றும் 2007 இல் நடந்த மதக்குழுக்களுக்கு இடையிலான வன்செயல்களுக்குப் பிறகு மிகவும் மோசமான அளவில் மக்கள் கொல்லப்பட்ட மாதமாக இது காண்பிக்கப்படுகிறது.

இதன் மூலம் அந்த நாடு மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இது ஒரு துன்பகரமான பதிவு என்று இராக்குக்கான ஐநா தூதுவர் மார்ட்டின் கொப்லர் குறிப்பிட்டுள்ளார்.

சகித்துக்கொள்ள முடியாத இந்த இரத்தக்களரியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இராக்கிய அரசியல் தலைவர்களை அவர் கேட்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இராக் எங்கிலும் சியா மற்றும் சுன்னி இன முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஒரே நேரத்தில் பல குண்டுகள் வெடித்துள்ளன.