ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார்!!

1044

IN11_C_V__WIGNESWA_2337718f
ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என நம்புவதான வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்போடு மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும் என, வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் அதனை ஏற்கவில்லை. குறித்த பகுதியில் அவர்கள் பெரும்பான்மையாகவே வாழ்ந்தனர்.

இரு மரங்கள் அருகருகே இருப்பதைப் போலவே வாழ அவர்கள் விரும்புகின்றனர், என அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். உணவுப் பாதுகாப்போடு மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும் என, வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.