சீனாவில் மின்மினி பூங்கா!!

648

minminiமின்­மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறை­வே­றி­யுள்­ளது. மத்­திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்­மினிப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு இரவு நேரங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மின்­மினி பூச்­சி­களின் ஒளியைக் கண்டு ரசிக்­கலாம். இந்தப் பூங்கா 5 பகு­தி­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பறக்கும் பகுதி, கவ­னிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்­பெ­ருக்கப் பகுதி, அறி­வியல் விளக்கப் பகுதி என்று பிரிக்­கப்­பட்டு, பார்­வை­யா­ளர்­களைக் கவர்ந்­தி­ழுக்­கி­றது. இங்கே பார்­வை­யா­ளர்கள் தவிர, ஆராய்ச்­சி­யா­ளர்­களும் பெரு­ம­ளவில் வரு­கி­றார்கள். இங்­கி­ருந்து மின்­மி­னி­களை விலைக்கு வாங்­கிக்­கொண்டும் செல்ல முடியும்.

பூச்­சிகள் வாழக்­கூ­டிய இயற்கை வளங்கள் குறையும் நேரத்தில் இப்­ப­டிப்­பட்ட பூங்­காக்கள் பூச்­சி­க­ளுக்கு நன்மை அளிக்­கின்­றன.

இங்­கி­ருந்து உற்­பத்­தி­யாகும் மின்­மி­னிப்­பூச்­சி­களை ஒரு ஜாடியில் அடைத்து, பல்­வேறு இடங்­க­ளுக்கும் இணையம் மூலம் விற்­பனை செய்து வரு­கி­றார்கள். மே மாதம் முதல் ஒக்டோபர் வரை இந்தப் பூங்கா திறந்திருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் திறக்கப்படும்.