தலையை மூடாததற்காக பெற்ற மகளையே அடித்துக்கொன்ற தந்தை!!

587

1106051065Untitled1-1துப்பட்டாவால் தலையை மூடவில்லை என்பதற்காக ஆறு வயது சிறுமியை, அவளது தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பரேலி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் எனும் சந்த்மியான் தன் மனைவியையும் மகளையும் கண்டிப்பு என்கிற பெயரில் வெளியே கூட்டிச் செல்லாமலும், வெளி ஆட்களை வீட்டில் விடாமலும் அடிமைகளைப் போல மிகவும் கொடூரமான முறையில் நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது ஆறு வயது மகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் தலையில் அணிந்திருந்த துப்பட்டா நழுவியது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது தந்தை சிறுமியின் தலையை தரையில் வெறி பிடித்த மிருகத்தைப்போல் திரும்பத்திரும்ப மோதி, அடித்தே கொன்றுள்ளார்.

மகளை பறிகொடுத்த தாய் பொலிசில் புகாரளித்ததையடுத்து, சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.