அளவுக்கதிகமாக கல்சியம் மாத்திரைகளை உட்கொள்வது உடல் நலத்துக்கு அபாயம்!!

442

calcium tabletsகல்சியம் மாத்திரைகளானது உடல் நலத்திற்கு நன்மை பயப்பதை விடவும் அதிகளவு தீங்கையே விளைவிப்பதாக பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எலும்பு பலம் இழப்பதால் ஏற்படும் ஒஸ்ரியோபொரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்கள் மத்தியில் கல்சியம் மாத்திரைகள் பிரபலம் பெற்று விளங்குகின்றன.

ஆனால் அளவுக்கதிகமாக கல்சியம் மாத்திரைகளை உட்கொள்வது எலும்பு முறிவு அபாயத்தை குறைக்க உதவுவதில்லை என்பதுடன் வயிற்றுப் பிரச்சினைகள், இருதய பிரச்சினைகள் மற்றும் இடுப்பு எலும்பு சேதமடைதல் என்பவற்றுக்கு காரணமாவதாக பிரித்தானிய உணவுத் திட்ட சங்கத்தைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அவர்களது ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஆய்வேட்டில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.இதன் பிரகாரம் வயதுவந்தவர்கள் தினசரி 700 மில்லிகிராமிற்கு அதிகமான கல்சியத்தை உட்கொள்வது அவர்களது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கும் நிபுணர்கள், நாளாந்த உணவின் மூலம் உடலுக்குத் தேவையான கல்சியத்தை ஒருவர் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.