கடற்கன்­னி­யர்­க­ளாக மாறும் அமெ­ரிக்­கர்கள்!!

521

கடற்கன்னி

உல­க­ளா­விய மக்­களில் பெரும்­பா­லானோர் வாழ்வில் ஒரு­மு­றை­யேனும், கடல்­கன்­னியைப் பற்­றிய கதை­களால் ஈர்க்­கப்­பட்டு, தமது வாழ்­நாளில் அவர்­களை ஒரு­மு­றை­யேனும் பார்க்க வேண்டும் என ஆசைப்­ப­டு­கின்­றனர். கொலம்பஸ், இந்­தி­யாவைத் தேடி கடல் வழியே பய­ணித்­த­போது, கடல்­கன்­னியைப் நேரில் பார்த்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

நிஜ­மா­கவே கடல்­கன்னி இருக்­கின்­றதோ, இல்­லையோ! அமெ­ரிக்­கர்கள் பல­ருக்கு அதன் மீது உள்ள நம்­பிக்கை ஒரு முழு­நேர வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்தித் தந்­துள்­ளது.

அமெ­ரிக்­காவின் புள்­ளி­ விபரவியல் பதி­வு­க­ளின்­படி, இந்­நாட்டு ஆண் மற்றும் பெண்­களில் ஆயிரம் பேர், தமது முழு­நேர வேலை­யாக கடல்­கன்­னி­யா­கவோ (மெர்மெய்ட்) மற்றும் கடற்­கன்­னியின் ஆண்­பா­லான மெர்­மெ­னா­கவோ மாறி­யுள்­ளனர்.மீன் காட்­சி­ய­கங்கள், நீச்சல் குளங்­களில் கொண்­டா­டப்­படும் பிறந்த நாள் விருந்துகள் போன்றவற்றில், கடல் கன்னியாக காட்சியளித்து பலருக்கும் மகிழ்ச்சி தருகின்றனர்.