
சிறுவயதிலேயே மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், தலைமைத்துவம் போன்ற அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் காரணமாக உள்ளவர்கள் ஆசிரிய சமூகமே.
ஒரு நாட்டிலே நல்லதொரு சமூகத்தையும் நற்பிரஜைகளையும் உருவாக்குகின்ற அதிபர், ஆசிரியர்களின் சேவை ஒரு புனிதமானதும் கௌரவத்துக்குரியதுமான மகத்தான சேவையுமாகும். இப்படிப்பட்ட ஒர் சேவையை நேரகாலம் பாராது பாகுபாடுகள் காட்டாமல் இதயசுத்தியுடன் நேர்மையாக கடமையாற்றவேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா விடுத்துள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அச் செய்தியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி மட்டும் புகட்டுவதோடு நின்றுவிடாது அவர்கள் சார்ந்த ஒழுக்கம் கலை கலாச்சாரம் போன்ற விடயங்களையும் கற்பிக்க வேண்டும்.
தற்போதய காலகட்டத்தில் பலவகைப்பட்ட துஸ்பிரயோகங்கள் சமூகத்தில் பெருகிவருகின்றது. ஆகவே சிறுவயதில் இருந்தே மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக் கல்வியை கற்றுக்கொடுப்பதன்மூலம் எமது சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்க முடியும் எனகூறிக்கொள்வதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசியர் தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.





