தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு- விரைவில் தீர்மானம்!!

1406

62-private-sector-employees-get-rs-2500-salary-increment1732626003தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கடந்த முதலாம் திகதி மூன்று பிரதான கட்சிகளுடன் எனது தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு திட்டம் அரசாங்கத்தால் விரைவில் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும் என்பதோடு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் இம் மாதத்துக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.