ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரிய பல்மைராவிலுள்ள பாரம்பரிய வளைவான நுழைவாயிலை தகர்த்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.அந்த நுழைவாயிலானது 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே அந்தத் தளத்திலிருந்த இரு ஆலயங்களை தகர்த்திருந்தனர்.பண்டைய உலகின் அதி முக்கிய கலாசார தளங்களில் ஒன்றாக பல்மைராவை யுனெஸ்கோ வகைப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.




