அமெரிக்க தென் கரோலினாவில் இடம்பெற்ற பாரிய வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர்.மேற்படி மழை வீழ்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் கடந்த 1000 வருடங்களில் இல்லாத மோசமான மழைவீழ்ச்சி என தென் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.கரிபிய பிராந்தியத்தை தாக்கிய ஜோக்கின் சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனா திபதி பராக் ஒபாமா இந்த வெள்ள அனர்த்தத்தையொட்டி அந்தப் பிராந்தியத்தில் அவசரகால நிலை மையொன்றை பிரகடனப்படுத்தியுள்ளார். வெள்ளத்தில் சிக்கி யிருந்த சுமார் 100 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள் ளனர்.




