உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்!!

808

7edb3bdb-67a8-482f-a825-560f23da6453_S_secvpfஉயரம் குறைவாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரத்தை பொருட்டு பார்த்தல் மட்டும், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும்.

இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். தொங்குவது போன்ற பயிற்சிகளை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கலாம், நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுவதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

வீட்டில் பரண் மேல் தொங்கலாம். இதற்காக ஜிம்முக்கு போக வேண்டும் என்பதில்லை. உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம். கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து சில மாதங்களுக்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.