கைவிரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்தில் நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!!

417

இந்தியர் ஒருவர் தனது கைவிரல்களில் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 78 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர், தனது இடது கையில் உள்ள 5 கை விரல்களிலும், 909.6 செ.மீட்டர் நீளத்திற்கு நகங்களை வளர்த்துள்ளார்.

கட்டை விரலில் மட்டும் 2 மீற்றர் நீளத்திற்கு நகம் வளர்த்திருக்கிறார், 1952 ஆம் ஆண்டு முதல் இவர் நகங்கள் வளர்க்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நகம் வளர்க்கும் விவகாரத்தினால் தான் பல சமூகப்பிரச்சினைகளை எதிர்கொண்டதாக தெரிவித்த ஸ்ரீதர், இருந்தும் அதில் இருந்து பின்வாங்காமல் முழுவீச்சில் நகம் வளர்த்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது, இந்த நகங்களை அருங்காட்சியகத்திற்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 2 3