
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் முயற்சியால் வவுனியாவில் முதற்தடவையாக கல்விமுதுமானி கற்கை நெறிகள் ஆரம்பிக்கபடவுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியால் முதற்தடவையாக வவுனியாவில் கல்விமுதுமானி பட்டப்பின்படிப்ப கற்கை நெறி இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நடைபெற்றுவந்த மேற்படி முதுமானி பட்டப்பின்படிப்பு கற்கைநெறி இவ்வருடம் முதல் வவுனியாவில் அமைந்துள்ள யாழ்பல்கலைகழக வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக வவனியா மாவட்ட ஆசிரியர்கள் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து யாழ்பல்கலைகழக நிர்வாகத்திடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கமைவாக இவ்வருடம் முதல் கற்கை நெறிகள் வவுனியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கல்வி முதுமானி கற்கை நெறிக்கான போட்டிப்பரீட்சையில் குறிப்பிட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





