ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஜாலியான விஷயமாம் – தோனி!!

525

IN29_DHONI_877849fதென் ஆபிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து போட்டியின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் போத்தல்களை வீசினர்.

இதனால், சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரசிகர்களின் ரகளைக்கு கிரிக்கெட் உலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

போட்டியின்போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசியது ஜாலியான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சீரியஸான விஷயம் இல்லை. பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு வீரருக்கும் பெரிய ஆபத்து எதுவும் நிகழவில்லை என்று தோனி தெரிவித்துள்ளார்.