வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகளுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை!!

1005

83174_thalatha-ahtukorala-01

சுற்றுலா வீசாவில் வௌிநாட்டு வேலை வாய்புக்காக பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் இடம்பெரும் பாரிய அளவிலான மோசடிக்கு எதிராக, பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் இடம்பற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் குவைத் நாட்டுக்கு சென்ற 11 இலங்கையர்கள் அந்த நாட்டு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் சுற்றுலா விசாவில் வேலை வாய்ப்புக்காக சென்றமையே இதற்குக் காரணம்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அதிகாரிகளும் இதில் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.