மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய விருது!!

1173

award2015 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய பசுமை விருது போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய மட்டத்தில் விருது கிடைந்துள்ளது.

இவ்விருதானது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார்க்கு வழங்கப்பட்டது.

அகில இலங்கை பூராகவும் பலதரப்பட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் திணைக்களங்களுக்குள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு மாத்திரம் இவ்விருது கிடைத்துள்ளது.