உணவு மோகத்தால் அவலநிலை!!

822

800-pound-man-claims-he-was-kicked-out-of-hospital-for-ordering-pizzaஉடல் பரு­ம­னுக்­காக சிகிச்சை பெற அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வேளை மருத்­து­வர்­க­ளுக்கு தெரி­யாமல் பீஸா உணவை வர­வ­ழைத்­த­மைக்­காக மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 800 இறாத்தல் நிறை­யு­டைய நபர், தனது தந்­தையின் வாக­னத்தில் வாழும் நிர்ப்­பந்­தத்­­திற்கு உள்­ளான சம்­பவம் அமெ­ரிக்க ரொட் தீவில் இடம்­பெற்­றுள்­ளது.

ரொட் தீவு மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த கடந்த சில மாதங்­களில் ஸ்டீவன் அஸன்தி (33 வயது) என்ற மேற்­படி நபரின் நிறை சுமார் 20 இறாத்­தலால் குறைந்­தி­ருந்­தது.

எனினும் அவர் உடல் பருமன் சிகிச்சை குறித்து தனக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த மருத்­து­வ­மனை விதி­களை மீறி பீஸா உணவை வர­வ­ழைத்து உண்­டதால் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேற்­ற­ப்பட்டார்.

இந்­நி­லையில் தனது மகனை வீட்­டுக்கு அழைத்துச் சென்றால் அவர் மேலும் அதி­க­ள­வான உணவை உண்டு தனது உயிருக்கு அபா­யத்தைத் தேடிக் கொள்வார் என அஞ்சிய ஸ்டீவன் அஸன்தியின் தந்தை ஸ்டீவன் வியலட் அவரை தனது வாகனத் தில் தங்க வைத்துள்ளார்.