வவுனியாவில் கத்தி முனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

927

Robbery-at-knife-point

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வீடு புகுந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியர் சாம்பல் தோட்டம் பகுதியில் இரவு வேலையில் புகுந்த 6 பேர் கொண்ட குழு கத்தி முனையில் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த ஒன்றரைலட்சம் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திருட்டில் ஈடுபட்டவர்கள் முகத்தை துணினளால் மூடிக் கட்டியிருந்ததுடன் கறுப்பு ஜக்கெட் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்