73 அகதிகள் நாடு திரும்பினர்!!

517

Sri-Lanka-Air-Port

இந்­தி­யாவின் தமி­ழ­கத்தில் தங்­கி­யுள்ள இலங்கை அக­தி­களில் 73 பேர் நேற்று நாடு திரும்­பி­யுள்­ளனர். ஐக்­கிய நாடுகள் அக­திகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே இந்த 73 பேரும் நாடு திரும்­பி­யுள்­ளனர்.

நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவு­னி­யா­வி­லி­ருந்து இந்­தி­யா­விற்கு சென்றோம். ”நாம் மண்­டபம் முகா­மிற்கு செல்லும் போது எனக்கு ஒன்­பது வயது. எனினும் நாங்கள் மீண்டும் எமது சொந்த நாட்­டுக்கு செல்­லவே விரும்­பு­கின்றோம்” என்று இந்­தி­யாவில் வைத்து இலங்கை திரும்பும் வழியில் இலங்­கையர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார்.

2009 ஆம் ஆண்டு இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்­தது. எனினும் இன்னும் ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட இலங்கை அக­திகள் இந்­தி­யாவின் தமி­ழ­கத்தில் பல முகாம்­களில் வாழ்ந்து வரு­கின்­றனர்.



கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்­ப­குதி வரை 12, 500 இலங்கை அக­திகள் நாடு திரும்­பி­யுள்­ள­தா­கவும், அவர்­க­ளுக்கு உத­வி­களை வழங்கியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.