புத்த பிக்கு ஒருவர் பதினொரு வயது நிரம்பிய சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டமை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட புத்த பிக்குவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தெகியத்த கண்டிய நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி ஜி.எம்.பிரியதர்ஷினி சம்பந்தப்பட்ட புத்த பிக்குவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தெகியத்த கண்டிய பகுதியில் மொரதெனிய விஹாரையின் புத்த பிக்கு ஒருவர் விஹாரையின் அருகேயுள்ள வீடொன்றிற்குள் புகுந்து தனிமையில் இருந்த 11 வயது நிரம்பிய சிறுமியை கட்டியணைத்து முத்தமாரி பொழிந்துள்ளார். இதனை அச் சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் தெகியத்த கண்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இப் புகாரின் பேரில் பொலிஸார் சம்பந்தப்பட்ட புத்த பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.