காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது.
தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.