கொஸ்தாரிக்காவில் பயணிகள் விமானமொன்று வீதியொன்றில் சென்ற வாகனங்களுக்கு சில யார் கள் உயரத்தில் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினின் மட்றித் நகரிலிருந்து கொஸ்தா ரிக்காவிலுள்ள சான் ஜோஸ் நகருக்கு பயணித்த எயார்பஸ் 340 விமானமே இவ்வாறு பறந்துள்ளது.
இந்த விமானம் சான் ஜோஸ் நகரிலுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் கடும் காற்று காரணமாக அந்த விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டமை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.