வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார்.
மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட் சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவா ய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
2007 முதல் 2009ஆம் ஆண்டுவரை சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மெஸ்சியும் அவரது தந்தைஜோர்ஜ் கார்சியோவும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற் றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக லயனல் மெஸ்சி நீதிமன்றத்தில் அளித் துள்ள மனுவில், ” தனது வரி தொடர்பான விவகாரங்களை தந்தை ஜார்ஜ் கார்சியாதான் கவனித்து வந்ததாகவும் தனக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாது. எனவே தான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம். அந்நாட்டு சட்டப்படி, இந்த வழக்கில் மெஸ்சிக்கும் அவ ரது தந்தைக்கும் 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.