தோனியின் தலைவர் பதவிக்கு ஆப்பு வைப்பாரா கோலி??

385

1662204849Spotஇந்திய கிரிக்கெட்டின் 3 நிலை போட்டிகளிலும் இரண்டு அணித்தலைவர்கள் உள்ளனர். 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு டோனியும், டெஸ்ட் போட்டிக்கு வீராட் கோலியும் அணித்தலைவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டியில் தோனிக்கு பதிலாக வீராட்கோலியை அணித்தலைவராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு உறுப்பினருமான மொகீந்தர் அமர்நாத் வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி டெஸ்டுக்கும், ஒருநாள் போட்டிக்கும் ஒரே அணித்தலைவர் இருக்க வேண்டும். 20 ஓவர் போட்டிக்கு மற்றொருவர் தலைவராக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி பல்வேறு சவால்களை சமாளித்து இருக்கிறார்.

இதனால் ஒருநாள் போட்டி கேப்டனுக்கு அவர் தகுதியானவர். தோனிக்கு பதிலாக வீராட்கோலியை ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு உறுப்பினருமான மொகீந்தர் அமர்நாத் வலியுறுத்தி உள்ளார்.