பலஸ்தீன பெண்ணொருவரை இஸ்ரேல் வீரர்கள் சுடும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபுலா நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் பல முரண்பாடான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
குறித்த பெண் இஸ்ரேலிய இராணுவத்தை கத்தியால் குத்த முயன்றமையாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட் ட தாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. அப்பெண் தீவிரவாதி எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் பலஸ்தீன ஊடகங்கள் சில இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் கைதாகியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.