வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற் சங்க சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தகவல் அறியும் உரிமை யாருக்காக? எனும் தலைப்பிலான மக்கள் கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இன் நிகழ்வினை கிளிநொச்சி ஊடக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த சம்மேளனமானது, காலை 10 மணியளவில் பரந்தன் பொது நோக்க மண்டபத்தில் ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு.தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கருத்துரைகளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மக்கள் தொடர்பாடல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோஸலி மனோகரன், யாழ் பல்கலைக்கழக மொழியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சாமிநாதன் விமல் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.